மீனாட்சி கோயில் பாதையை ஆக்கிரமித்தது மாநகராட்சி; நடைபாதை வியாபாரம் ஜோர் | மதுரை செய்திகள் | Dinamalar
மீனாட்சி கோயில் பாதையை ஆக்கிரமித்தது மாநகராட்சி; நடைபாதை வியாபாரம் ஜோர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 செப்
2021
06:53

மதுரை : மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புது மண்டபம் அருகே கட்டப்பட்ட குன்னத்துார் சத்திரம் பின்புறம் கீழச்சித்திரை வீதி மீனாட்சி பூங்கா ரோட்டை ஆக்கிரமித்து மாநகராட்சி பாதை அமைத்துள்ளது. மாநகராட்சிக்கு போட்டியாக நடை பாதையை ஒற்றையடி பாதையாக மாற்றி இருபுறமும் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



சில மாதங்களுக்கு முன் கீழச்சித்திரை வீதியில் நடந்து வந்த ஒருவர் மயங்கி விழுந்தார். உடனடியாக '108' ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை ஆதினம் மடம் வழியாக வந்த ஆம்புலன்ஸ், அந்நபரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வந்த வழியே திரும்பி சென்றது. கீழஆவணி மூலவீதி வழியாக சிம்மக்கல் செல்ல சில நிமிடங்கள் ஆயின. அந்தளவிற்கு கீழஆவணிமூலவீதி, தளவாய் அக்ஹாரத்தெருவில் நெரிசல், ஆக்கிரமிப்பு.



தற்போது பக்தர்கள் மீனாட்சி கோயிலுக்கு அதிகளவில் வர ஆரம்பித்துள்ளனர். இச்சூழலில் ஆம்புலன்ஸ் வந்து செல்ல தனிப்பாதை அவசியம். அதற்கு கீழச்சித்திரை வீதி மீனாட்சி பூங்கா பாதையே போதுமானது. கீழச்சித்திரை வீதியில் இருந்து ஆம்புலன்ஸ் ஆவணி மூலவீதி வழியாக செல்வதற்குள், நோயாளி நிலை பரிதாபமாகத்தான் இருக்கும். அதற்கு பதில் நொடிப்பொழுதில் மீனாட்சி பூங்கா பாதை வழியாக உடனடியாக அழைத்துச்செல்ல முடியும்.



நோயாளியின் உயிரையும் காப்பாற்ற முடியும். வி.ஐ.பி.,க்களின் வருகைக்காக கூட இந்த பாதையை பயன்படுத்தலாம்.இந்நிலையில் இந்த பாதை தற்போது மாநகராட்சி உட்பட ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. 'பாதுகாப்பு' என்றுக்கூறியே ஒற்றையடி பாதையாக மாற்றி விட்டனர்.



போதாக்குறைக்கு இந்த பாதையில் குன்னத்துார் சத்திரம் பின்புற நுழைவு வாயிலில் ரோடு வரை படிக்கட்டுகள் கட்டி மாநகராட்சியே ஆக்கிரமித்துள்ளது வேதனை. சில அதிகாரிகளால் மாநகராட்சி இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவதை கமிஷனர் கார்த்திக்கேயன் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X