ஓசூர் மாநகராட்சியுடன் 8 பஞ்.,களை இணைக்கக்கூடாது; இ.கம்யூ., தீர்மானம் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
ஓசூர் மாநகராட்சியுடன் 8 பஞ்.,களை இணைக்கக்கூடாது; இ.கம்யூ., தீர்மானம்
Added : செப் 22, 2021 | |
Advertisement
 

ஓசூர்: ஓசூர் மாநகராட்சியுடன், 8 பஞ்.,களை இணைக்கக்கூடாது என, இ.கம்யூ., மாநில குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓசூரில், இ.கம்யூ., கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமையில் நான்கு நாட்கள் நடந்தது. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் பேசினர். கூட்டத்தில், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி வடக்கு வன விலங்கு சரணாலயத்தை ரத்து செய்ய வேண்டும். பழங்குடியினர் நில உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், சூளகிரியில், வனவிலங்குகளால் மனிதர்கள் தாக்கப்படுவதையும், பயிர்கள் நாசமாவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த, 10 ஆண்டுகளாக, பொது பிரச்னைகளுக்கு போராடியவர்கள் மீது, அ.தி.மு.க., அரசு போட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும். ஓசூர் - ஜோலார்பேட்டை இடையே ரயில் வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும். ஓசூர் மாநகராட்சியுடன், எட்டு பஞ்.,க்களை இணைக்கக் கூடாது, என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய குழு உறுப்பினர் மகேந்திரன், மாநில குழு உறுப்பினர் லகுமையா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X