பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை கத்தியால் குத்தி கொன்ற மகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
12:11


அவலுார்பேட்டை : பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகளிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; விவசாயி. மாற்றுத்திறனாளியான இவர், வேன் மூலம் தக்காளி வியாபாரம் செய்து வந்தார்.இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 20 - 17 வயதில் மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சென்னையில் தங்கி, ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். இளைய மகள், அவலுார்பேட்டையில் பிளஸ் 2 படித்து வருகிறார்.



நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், தன் தந்தை வெங்கடேசன் மார்பில் கத்தியால் குத்தப்பட்டு, இறந்து கிடப்பதாக அருகில் வசித்தவர்களிடம் இளைய மகள் தெரிவித்தார்.செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன், செஞ்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, அவலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத், தடயவியல் நிபுணர் சண்முகம் ஆகியோர் இரவு 9:00 மணியளவில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர்.



போலீஸ் மோப்ப நாய் ராக்கி, இளைய மகளையே சுற்றிச் சுற்றி வந்ததால், சந்தேகம் எழுந்தது. விசாரணையில், தந்தையை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.நேற்று முன்தினம் மாலை, வீட்டிற்கு குடிபோதையில் வந்த வெங்கடேசன், இளைய மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த இளைய மகள் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தையின் மார்பில் குத்திக் கொலை செய்துள்ளார்.


வெங்கடேசனின் அக்காள் பச்சையம்மாள் புகாரின்படி, அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, இளைய மகளிடம் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X