ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் மனைவி பஸ்லுான், 35; மகள் முஸ்கான், 19; மருமகன் சமீர், 22. இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் திருமணமானது. சமீர், முஸ்கான், உறவினர் சல்மான், 22; குழந்தை ஆலியா, 8; மாமியார் பஸ்லுான் ஆகியோர் நேற்று காலை சூளகிரி அருகே சின்னாறு அணையை சுற்றிப் பார்க்க சென்றனர். அணையில் குளிக்க முயன்ற சமீர், ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினார். அவரை காப்பாற்ற பஸ்லுான் தண்ணீரில் இறங்கினார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.