1,500 ஆண்டு பழமையான 2 பெண் சிற்பம்: கொடுமுடி அருகே கண்டுபிடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
18:32

கொடுமுடி: கொடுமுடி அருகே, 1,500 ஆண்டுகள் பழமையான, வெண்சாமரம் வீசும் இரண்டு பெண் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய பொறியாளர் ரவிக்குமார், பொன்னுசாமி, சக்தி பிரகாஷ் ஆகியோர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில், நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள அஞ்சூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 1,500 ஆண்டுகள் பழமையான, வெண் சாமரம் வீசும் இரண்டு பெண் சிற்பங்களை கண்டறிந்தனர். இதுகுறித்து ரவிகுமார், தமிழக தொல்லியல் துறை முன்னாள் துணை இயக்குனர் பூங்குன்றனார் கூறியதாவது: அஞ்சூர் கிராமத்தில், பாண்டீஸ்வரர் மற்றும் கொற்றவை கோவிலின் பின் பகுதியில், முட்புதரில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. இறைவனுக்குரிய எட்டு மங்கல சின்னங்களில் வெண் சாமரமும் ஒன்று. இச்சிற்பம் கி.பி.?ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதால், துவாரபாலகியாக இருக்கலாம். 150 செ.மீ., உயரம், 45 செ.மீ., அகலமும் கொண்ட ஒரு சிற்பத்தில் உள்ள பெண், இடது காலை ஊன்றி வலது காலை சிறிது மடக்கி, இருபக்க தோற்றத்தில் உள்ளார். வலது கையை மடக்கி பிடித்துள்ள வெண் சாமரம், வலது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. இடது கையை ஊரு ஹஸ்த முத்திரையில் தொடை மீது பதித்துள்ளார். தலையில் மகுடம் அணிந்து காணப்படும் சிற்பம், சிற்பக்கலைக்கு ஒரு தனிச்சிறப்பாக திகழ்கிறது. இதுபோல மற்றொரு சிற்பமானது, 120 செ.மீ., உயரம், 60 செ.மீ., அகலத்தில் உள்ளது. வலது, இடது காலை சிறிது மடக்கி, சதுர நடனம் அமைப்பில் பெண் உள்ளார். வலது கையை மடக்கிப்பிடித்துள்ள வெண்சாமரம், இடது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. இடது கையை வயிற்று பகுதியில் ஏந்தி அர்த்தசந்திர முத்திரையில் உள்ளார். இச்சிற்பங்கள் சாத்விக திருவுருவ அமைப்பில் நின்ற கோலத்தில் காணப்படுகின்றன. கொங்கு மண்டலத்தில் உள்ள கலை சிற்பங்களுக்கு எல்லாம் இந்த சிற்பங்கள் முற்பட்டவை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X