ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அஞ்சல் ஊழியர் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் தொடக்கவிழா மற்றும் குழு கூட்டம் நடந்தது. கோட்ட தலைவராக சர்வதீர்தம், செயலராக கலைஅரசன், பொருளாளராக தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஜி.டி.எஸ்., ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி உச்சநீதிமன்றம் செல்வது, சேலம் சொசைட்டியில் உள்ள ஜி.டி.எஸ்., பணத்தை திரும்ப பெறுவது சம்பந்தமாக நீதிமன்றத்தை அணுகுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர் சேவியர்குருஸ் நன்றி கூறினார்.--------