ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வண்ணாங்குண்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் 80. நேற்று மாலை 5:00 மணிக்கு வண்ணாங்குண்டு கண்ணன் கோயில் முன்புறம் உட்கார்ந்திருந்தபோது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத நபர் மூதாட்டியிடம், தங்களது கழுத்தில் அணிந்திருக்கும் மூன்றரை பவுன் தங்கச்சங்கிலி டிசைன் நல்லதாக உள்ளது பார்த்து விட்டு தருகிறேன் என்று கேட்டுள்ளார்.நபர் கூறியதை கேட்டு செயினை கழற்றி கொடுத்துள்ளார். செயினை வாங்கிய வேகத்தில் டூவீலரில் வந்த நபர் தப்பிச் சென்று விட்டார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.