பிணையின்றி கிடைக்கும் வங்கிக் கடன் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.1 கோடி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
23:36

மேட்டுப்பாளையம் : விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு, எவ்வித பிணையும் இன்றி, ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.



மேட்டுப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஸ்டேட் வங்கி சார்பில், விவசாயிகள் சந்திப்பு முகாம் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு, ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் சுராஜ் சீனிவாசன், தலைமை வகித்தார்.கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி பேசுகையில்," நுண்ணீர் பாசன திட்டத்திற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கடன் தொகையை பெற்று, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும்," என்றார்.25 வகை கடன்கள்ஸ்டேட் வங்கி அலுவலர்கள் பேசியதாவது:வேளாண் பயிர் கடன், கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு கடன், விவசாய தங்க நகைக் கடன், தோட்டக்கலை பயிர் கடன், உள்கட்டமைப்பு மேம்படுத்த கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன், பட்டுப்புழு, தேனீ, மீன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு கடன், இயற்கை உரம், உயிர் உரம், மண்புழு உரம் தயாரிக்க கடன் என, விவசாயம் சார்ந்து, 25 வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் வரை, எவ்வித பிணையம் இல்லாமல் கடன் வழங்கப்படும். வாங்கிய கடன்களை முறையாக செலுத்தினால், வங்கியின் சார்பில் பரிசும் வழங்கப்படுகிறது.



எனவே, இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கடன்களை பெற்று, வளம் பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.பரிசுநிகழ்ச்சியில், கடன் தொகையை முறையாக திருப்பி செலுத்திய விவசாயிகள், ரவிராஜ், முருகேசன், செந்தில்குமார், திருமயன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மூன்று விவசாயிகளுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் கடன் தொகை சான்றிதழ், வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், வேளாண் துணை இயக்குனர் பெருமாள்சாமி, ஸ்டேட் வங்கி மேலாளர் ஹரீஷ் மனோகரன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் திருமலாராவ், வேளாண் தொழில் நுட்ப அலுவலர் ரம்யா, அட்மா, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள், ஸ்ரீ அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X