மடைகள் சீரமைக்காததால் பாதிக்கப்பட்ட கல்லுார் கண்மாய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
23:37

திருவாடானை : கல்லுார் கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து கண்மாய் பராமரிக்கபடாமல் உள்ளது. மழை நீர் வரத்து கால்வாய் புதர்மண்டி பாழாகியுள்ளது. மழை பெய்தாலும் முழுமையாக தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



திருவாடானை அருகே கல்லுார் ஊராட்சியில் ஒன்றியத்திற்கு சொந்தமான கல்லுார் கண்மாய் 25 எக்டேர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 80 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நான்கு மடைகளும், ஒரு கலுங்கும் உள்ளது. இக் கண்மாய்க்கு இடையில் சாலை அமைக்கப்பட்டதால் வடக்கு, தெற்கு என இரு கண்மாய்களாக பிரிக்கப்பட்டது.கண்மாய் பராமரிப்பு இல்லாமல் சில இடங்களில் மணல் மேடாகிவிட்டது.



தென்பகுதியில் உள்ள கண்மாய் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மராமத்து செய்யப்பட்டது. அதிலும் ஒரு மடை மட்டுமே சீரமைக்கபட்டு, மற்றொரு மடை சீரமைக்கப்படவில்லை. வட பகுதி கண்மாய் மராமத்து செய்யப்படவில்லை. இக் கண்மாய்க்கு வரத்துகால்வாய்கள் உள்ளன. கண்மாய் உள் பகுதி மட்டுமின்றி வயல்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களிலும் செடிகள் மண்டியுள்ளது. மடைகளில் சீமைகருவேல செடிகள் வளர்ந்து மணல் மூடியதால் தண்ணீர் வயலுக்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



கல்லுார் பஸ்ஸ்டாப் அருகே தண்ணீர் நிரம்பும் போது வீணாக வெளியேறாமல் இருக்க மதகு அமைக்கபட்டது. ஆனால் அந்த மதகும் சேதமடைந்ததால் மழை காலங்களில் தண்ணீர் வீணாக வெளியேறும்.மாங்குடி சுப்பிரமணியன் கூறுகையில், இப்பகுதியில் நெல் விவசாயம் மட்டும் செய்யப்படுகிறது. ஆகவே இக் கண்மாயை நம்பி தான் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.



100 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனைடைகின்றனர். சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கிநிற்க வாய்ப்பில்லை. இக் கண்மாய் நிரம்பும் பட்சத்தில் சேதமடைந்த மடைகளால் தண்ணீர் வீணாகும். ஆகவே மடைகளை சீரமைத்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X