மண்டபம் : ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடல்பகுதியில் நேற்று இந்திய கடற்படையினர் ரோந்து சென்றனர்.நடுக்கடலில் விசைப்படகு ஒன்றை சோதனையிட்டபோது மீன்பிடி அனுமதிச்சீட்டு, மீனவர் அடையாள அட்டை இல்லாமல் 5பேர் இருந்தனர். விசைப்படகை பறிமுதல் செய்து மண்டபம் மீன்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அனுமதிச்சீட்டு பெறாமல் சென்ற விசைப்படகிற்கு அரசின் டீசல் மானியம் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள்கூறினர்.