திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே, பண்ணை வீட்டின் மொட்டை மாடியில் 11 ஆயிரம் போலி மது பாட்டில்களை பதுக்கிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்;
தி.மு.க., பிரமுகர் தப்பியோடினார்.திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன்கோட்டை பகுதியில் போலி மது பாட்டில்கள் நடமாட்டம் உள்ளதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஏ.எஸ்.பி., அருண் கபிலன், இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி தலைவர் நிர்மலாவின் கணவரும், தி.மு.க., பிரமுகருமான இன்பராஜ், 52, என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை நடந்தது.அங்குள்ள வீட்டின் மொட்டை மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 136 போலி மது பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.இன்பராஜ் தப்பியோடி விட்டார். அங்கு தங்கியிருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வாலிபர்களை கைது செய்தனர்.