பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய மூதாட்டி படுகொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2021
23:58

திண்டுக்கல்:தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் மூதாட்டி, மர்ம நபர்களால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.



திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியை அடுத்துஉள்ளது வள்ளுவர் நகர். இப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலா, 70. இவர், 2012 ஜன., 10ல், இப்பகுதியில் நடந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.



தற்போது, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோரை பிரித்து அனுப்பும் பணியில் இருந்த நிர்மலா, பணிக்கு சென்றார். இ.பி., காலனியில் இருந்து ரெங்கநாதபுரம் செல்லும் வழியிலுள்ள டேவிட் நகர் பிரிவு அருகே பூட்டியிருந்த கடை வாசலில் அமர்ந்து, பணியாட்கள் சிலர் காலை உணவு சாப்பிட்டனர்.



அங்கு நிர்மலாவும் அமர்ந்திருந்தார்.அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், நிர்மலாவை சராமாரியாக வெட்டி, தலையை துண்டித்து எடுத்து, நந்தவனப்பட்டியில் உள்ள பசுபதி பாண்டியன் வீட்டு முன் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.தாடிக்கொம்பு போலீசார், நிர்மலாவின் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திண்டுக்கல் டி.ஐ.ஜி., விஜயகுமாரி, எஸ்.பி., சீனிவாசன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.



கொலையில் ஈடுபட்டு பைக்கில் தப்பியவர்கள், செட்டிநாயக்கன்பட்டி சத்யா நகரில் எதிரே வந்த நபர் மீது மோதினர். அதனால், பைக்கை அங்கேயே விட்டு, வெவ்வேறு வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் அந்த பைக்கின் பதிவு எண் மூலம் விசாரணை மேற்கொண்டனர். இதன்படி, சீவல்சரகைச் சேர்ந்த தமிழ் என்பவர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில், ஆறு தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.



பசுபதி பாண்டியன் கொலை வழக்கில், துாத்துக்குடி மாவட்டம், மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் மீது, தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. குற்றவாளிகள் 18 பேரில், புறா மாடசாமி, முத்துப்பாண்டி, பாட்சா, சாமி ஆகியோர் ஏற்கனவே கொலை செய்யப்பட்டனர்.



தற்போது, ஐந்தாவது நபராக நிர்மலா கொலை செய்யப்பட்டுள்ளார். பசுபதி பாண்டியன் கொலை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக, நிர்மலா எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X