ரூ.1,500 லஞ்சம்: எழுத்தர் கைது | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
ரூ.1,500 லஞ்சம்: எழுத்தர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
00:11

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் அருண்,23, பி.இ., பட்டதாரி; குப்பநத்தம் கிராமத்தில் உள்ள இவரது நிலத்திற்கு சிட்டா, அடங்கல் ஆவணங்களை கேட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

கடந்த 15ம் தேதி ஆவணங்கள் பெறச் சென்ற அருணிடம், பதிவறை எழுத்தர் சிவகுமார், 58, என்பவர் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் அருண் புகார் செய்தார்.நேற்று பகல் 1:00 மணியளவில், 1,500 ரூபாயை வாங்கிய சிவகுமாரை, போலீசார் கைது செய்து, அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X