பொள்ளாச்சி:கேரளாவில், இரண்டு கொலை வழக்குகளில் சிறை தண்டனை பெற்று விடுதலையானவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் பாதையில், குஞ்சிபாளையம் ரயில்வே கேட் அருகே, நேற்று அதிகாலை 5:35 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை சென்ற அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத ஒருவர் அடிபட்டு இறந்ததாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீசார் கூறியதாவது:கேரள மாநிலம், சித்துார் தாலுகா மீனாட்சிபுரம் மூலத்தரா பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை, 44, என்பது தெரியவந்தது. அந்த நபர், கேரளாவில் கொலை வழக்கு ஒன்றில், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து, 2014ம் ஆண்டு விடுதலையாகி வந்துள்ளார்.
அந்த ஆண்டே மனைவியை தீ வைத்து கொன்று, சிறை தண்டனை பெற்று 2020 நவம்பரில் விடுதலையாகியுள்ளார். மதுபோதைக்கு அடிமையான அண்ணாதுரை, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.