இடுக்கி அணையை ரசிக்க அக்.16 வரை அனுமதி | தேனி செய்திகள் | Dinamalar
இடுக்கி அணையை ரசிக்க அக்.16 வரை அனுமதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
01:23

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணையை காண ஓணம், கிறிஸ்துமஸ் பண்டிகை, வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர்.



கொரோனாவால் கடந்தாண்டு ஏப்ரல் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தாண்டு ஓணப்பண்டிகையையொட்டி ஆக.,19 முதல் அனுமதிக்கப் பட்டனர். நவ.,30 வரை அனுமதி இருந்த நிலையில் பயணிகள் வருகை குறைவு போன்ற காரணங்களால் பயணிகளுக்கான அனுமதி அக்.,16ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.



குறைவு: கொரோனா பரவலால் கேரள மக்கள் மட்டும் அணையை பார்க்கின்றனர். பிற மாநில பயணிகள் வராததால் வருமானம் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் வரை 25 ஆயிரம் பயணிகள் ரசித்ததன் மூலம் ரூ.26 லட்சம் வருவாய் கிடைத்துஉள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X