மேட்டுப்பாளையம் : காரமடை ரோட்டரி சங்கத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், நன்கொடையாக வழங்கப்பட்டன.
காரமடை ரோட்டரி சங்கத்தில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் ஞானசேகரன், தலைமை வகித்தார்.கால் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள், காது கேளாதவர்களுக்கு காது கேட்கும் கருவி, முதுகு தண்டுவடம் பாதித்தவருக்கு மருத்துவ செலவு என, 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், பட்டய தலைவர் சிவசதீஸ், நிர்வாகிகள் மகேஷ், கங்கா பழனிசாமி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.