எண்ணெய் டின் விலை உயர்வால் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
02:01

சேலம்:எண்ணெய் டின் விலை உயர்வால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.



இதுகுறித்து சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர் சங்கத்தலைவர் சந்திரதாசன் கூறியதாவது: நாட்டில் 15 லிட்டர் அளவில் தகர டின்களில் எண்ணெய் அடைத்து விற்கப்படுகிறது. சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து டின்னுக்கு இரும்பு தகடு இறக்குமதி செய்யப்படுகிறது. இதை நம்பி தொழில் செய்வோர் அத்தகடுகளை வாங்கி எண்ணெய் டின்னாக தயாரிக்கின்றனர். அதை பெரிய நிறுவனங்கள் மொத்த வியாபாரிகள் வாங்கி பயன்படுத்துகின்றனர்.



15 லிட்டர் டின்னை 75 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தினோம்.இரு ஆண்டுக்கு முன் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டின்னுக்கு இரும்பு தகடு தயாரிக்கும் நிறுவனம் ஐ.எஸ்.ஓ. முத்திரை பெற்றிருக்க அறிவுறுத்தியது. இந்த உத்தரவு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. வெளிநாடு நிறுவனங்கள் இந்தியாவில் எப்படி சான்றிதழ் பெறும் என்பதும் கொரோனா காலத்தில் அவர்களால் எவ்வாறு விண்ணப்பித்து பெற முடியும் என்பது கேள்விக்குறி.



இந்தியாவில் டாடா ஜிண்டால் நிறுவனங்களுக்கு டின் தயாரிக்கும் நிறுவனம் 3 தான் உள்ளன. ஆண்டுக்கு டின் தேவை ஏழரை லட்சம் டன்னாக உள்ளது. தயாரிப்பது 5 லட்சம் டன் தான். சேலம் மாவட்டத்தில் மாதம் 20 ஆயிரம் டின் தேவைப்படுகிறது. அதன் தட்டுப்பாடால் 3 மாதங்களாக விலை படிப்படியாக உயர்ந்து 15 லிட்டர் டின் தற்போது 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.



இதனால் பிளாஸ்டிக்கில் எண்ணெய் அடைத்து விற்கப்படும் என்பதோடு சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுக்கும் என்பதால் அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X