கொரோனா அச்சத்தை போக்க கவுன்சிலிங் நடத்தணும் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
02:15

சூலுார் : பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் கொரோனா அச்சத்தைப் போக்க, கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும், என, பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழகத்தில், தொற்று குறைந்ததால், பொதுப் போக்குவரத்து, வியாபாரம், தொழிற்துறை உள்ளிட்டவைகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால், பள்ளி, கல்லுாரிகள் திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.இதற்கிடையில், சுகாதாரத்துறை மற்றும் வல்லுனர் குழுவின் பரிந்துரைகளின்படி, பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கடந்த, செப்.,1 முதல் பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு உத்தரவிட்டது.ஆர்வம்பல மாதங்களுக்கு பிறகு மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். துவக்கத்தில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தது.அதன்பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக மாணவ, மாணவியர், தொற்றால் பாதிக்கப்பட்டனர்.ஒரே வகுப்பில் மூன்று பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.வகுப்பில் ஒரு மாணவர் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த வகுப்புக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. அந்த வகுப்புகளில் உடன் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, பரிசோதனை நடத்தப்படுகிறது.



தொற்று பாதிப்பு மற்றும் கொரோனா டெஸ்ட் உள்ளிட்டவைகளால், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடத்தில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கவுன்சிலிங் தேவைஇதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளி திறந்ததில் இருந்து, 60 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே வருகின்றனர்.சக மாணவர் தொற்றால் பாதிக்கப்படுவதை காணும் மற்ற மாணவர்கள், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.



இதனால், மறுநாள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்து வருகின்றனர். அவர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க, கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.இதே கருத்தை பெற்றோரும் வலியுறுத்தி வருகின்றனர். 'கல்வி, தொற்று அச்சத்துக்கு நடுவில் பெரும் உளைச்சலால் தவிக்கிறோம். தொற்று பாதிப்பு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. மருத்துவ செலவுகளை செய்யும் அளவுக்கு எங்களில் பலருக்கு வசதியில்லை. அதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X