'அத்தி' சாகுபடியில் ஆர்வம்
உடுமலை பகுதியில், புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன், மாற்று சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.அவ்வகையில், வருவாய் அளிக்கும், பழ மரங்கள் சாகுபடி முக்கியத்துவம் பெற்று வருகிறது. தற்போது, உடல் நலத்துக்கு பல்வேறு நன்மைகள் தரும், அத்திப்பழம், மதிப்பு கூட்டப்பட்டு, 'பாக்கெட்'களில், விற்பனை செய்யப்படுகிறது. அத்திப்பழத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைவாகவே, உள்ளது.
எனவே, ஒட்டு ரக மரக்கன்றுகள் வாயிலாக உற்பத்தியை அதிகரித்து, நிலையான வருவாய்க்கு விவசாயிகள் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.அத்தி மரக்கன்றுகள் நட்டதும், சொட்டு நீர் பாசனம் அமைத்து, குறிப்பிட்ட இடைவெளிகளில், தண்ணீர் பாய்ச்சுகின்றனர். பராமரிப்பு குறைவு, நிரந்தர வருவாய் காரணமாக, வரும், வடகிழக்கு பருவமழை சீசனில், அத்தி மரக்கன்றுகள் அதிகளவு நடவு செய்யப்படும் வாய்ப்புள்ளது.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகோவை மாவட்டத்தில், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் வாயிலாக, தற்காலிக வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில், தலா ஒருவர் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர். குறைந்தபட்சமாக, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த, ஏப்., 1ம் தேதியன்று, 18 வயது பூர்த்தியடைந்து; 29 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இளைஞர் நலனுக்காக சமுதாய பணியில் ஈடுபட ஆர்வம் வேண்டும். முழுநேர கல்வி பயில்வோர் விண்ணப்பிக்க இயலாது. இப்பணியை, அரசு நிரந்தர பணியாக கோர இயலாது.தேர்வு செய்யப்பட்டால், மாத ஊதியம், ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
அதிகபட்சமாக வரும், 2023 மார்ச் வரை பணி புரிய வாய்ப்புள்ளது. வரும், 28ம் தேதி, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேர்காணல் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, மாவட்ட இளையோர் அலுவலரை, 94873 08620, 94428 37245 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.தொழிலாளர்களுக்காக கட்சியினர் குரல்வால்பாறை ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கல்யாணி, மா.கம்யூ.,கட்சி பொதுசெயலாளர் பரமசிவம் ஆகியோர், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியிருப்பதாவது:வால்பாறையில், 420 இலவச பட்டாக்கள் வசதி படைத்தவர்களுக்கு வழங்க கடந்த ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வால்பாறையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் கண்டறிந்து, மூன்று தலைமுறையாக தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக பணியாற்றுபவர்களுக்கு, தலா மூன்று சென்ட் இடம் வழங்க வேண்டும்.
பல்வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் வால்பாறையில், அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழை நீர் வடிகால்கள், பாலங்களை ஒட்டிய கால்வாய்களை, துாய்மைப்படுத்தும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டனர்.கப்பளாங்கரை குட்டையின் நீர் வழிப்பாதையை துார்வாரி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து, பாலத்தின் கீழ் பகுதியில், நீர் வழிப்பாதையில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை அகற்றினர்.வடசித்துார் - நெகமம் ரோட்டில், 10 பாலங்கள், நான்கு பி.ஏ.பி., கிளைகால்வாய் பாலங்களையும் துார்வாரி மழை நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தினர். ரோட்டோரங்களில் ஓடும் மழை நீர், நேராக பாலத்துக்கு செல்லும் வகையில், கால்வாய் அமைக்கப்பட்டது.
மயானத்தை பராமரிக்க வலியுறுத்தல்பொள்ளாச்சி சப் - கலெக்டரிடம், தி.மு.க., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையிலான கட்சியினர், மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:பொள்ளாச்சி நகரின் பொது மயானம், உடுமலை ரோட்டில் அமைந்துள்ளது. இந்த மயானம், முறையான பராமரிப்பு இன்றி, ஆண்டுக்கணக்கில் விடப்பட்டுள்ளது. மயான வளாகத்தில் இறுதிச் சடங்கு செய்யும் பகுதியில் மின்விளக்கு, தண்ணீர் வசதி இல்லை.மயான வளாகம் முழுக்க புதர் செடிகள் வளர்ந்து காணப்படுவதால், இறந்தவர்களை கொண்டு செல்லவும், இறுதிச் சடங்கு செய்யவும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மக்கள் நலன் கருதி, மயானத்தை துாய்மை செய்து பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.மாணவர்களுக்கு 'ஆன்லைன்' போட்டிமடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில்,
மாணவர்களின் மொழித்திறன் அறிவை வளர்ப்பதற்காக போட்டிகள் நடத்தப்பட்டன.ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்ற இதில், திருக்குறளின் பெருமைகளை தெரிந்து கொள்வதற்காகவும், திருவள்ளுவரின் வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை எழுதுதல், திருவள்ளுவரின் உருவப்படம் வரைதல், கணினி வழியாக திருவள்ளுவரின் சிறப்புகள் அடங்கிய தொகுப்பை உருவாக்குதல் போன்ற போட்டிக ள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன.ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற, 10க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திருக்குறள் நுால்கள் பரிசாக வழங்கப்பட்டது.விவசாயிகள் குறைதீர் கூட்டம்நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும், 25ம் தேதி, மாவட்ட கலெக்டர் தலைமையில், 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகம், அறை எண் 240ல், நேரடியாக நடக்கிறது. இக்கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.மேலும், நுண்ணீர்ப்பாசனம் அமைக்க, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக்கொண்ட வேளாண் உதவி மையம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.இம்மையத்தின் வழியாக நுண்ணீர் பாசனம் அமைக்க, தேவையான தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.நகராட்சி பகுதியில் துாய்மைப்பணிநகராட்சி பகுதிகளில் மாபெரும் துாய்மை பணி முகாம், 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை, தினமும் காலை, 6:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.அதன் அடிப்படையில், உடுமலை நகராட்சி, 5 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும், சுகாதார ஆய்வாளர் தலைமையில், 30 துாய்மைப் பணியாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களில், 15 கி.மீ.,துாரம் உள்ள மழை நீர் வடிகால்கள் துார்வாரப்பட்டுள்ளது. 25ம் தேதிக்குள், 33 வார்டுகளிலும் உள்ள, 119 கி.மீ., துாரம் உள்ள, சிறு மழை நீர் வடிகால்களும், பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம், மழை நீர் வடிகால் ஓடைகளும் துார்வாரப்பட்டு, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.