நூறு சதவீதம் மானியம் பெற வேண்டுமா? சிறு, குறு விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
03:58


மடத்துக்குளம் : மடத்துக்குளம் பகுதியில், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் 100 சதவீதம் மானியம் பெற சிறப்பு முகாம் கண்ணாடிப்புத்துார் மற்றும் பாப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நாளை நடக்கிறது.



மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள், நுண்ணீர் பாசன த்திற்கு பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம் வழங்குகிறது.இந்தப்பாசனம் அமைக்க விரும்பும், ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு, சிறு, குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்க, கிராம அளவில் சிறப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, நாளை (24ம் தேதி) கண்ணாடிப்புத்துார் மற்றும் பாப்பான்குளம் கிராமநிர்வாக அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில், சிறு குறு விவசாயி சான்றிதழ் வழங்க கோரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது.தோட்டக்கலை பயிர்களான தக்காளி, வெங்காயம், மிளகாய், வெண்டை, கத்தரி, பூசணி வகைகள், தர்பூசணி, அவரை, முருங்கை, பந்தல் காய்கறி பயிர்கள், பாகல், புடலை, பீர்க்கன், சுரக்காய் ஆகியவற்றிற்கும்,பணப்பயிர்களான மா, கொய்யா, வாழை, பப்பாளிக்கும், தென்னை மற்றும் தென்னையில் ஊடுபயிர் செய்யும் காய்கறி வகைகளுக்கும், நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும்.



சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி, ஐந்து ஏக்கருக்கும் கூடுதலாக உள்ள இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைத்து தரப்படும்.சிறு குறு விவசாயி சான்றுக்கு விண்ணப்பிக்க, சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, பத்திர நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு ஆகியவற்றுடன் விவசாயிகள் முகாமில் பங்கேற்க வேண்டும்.கூடுதல் தகவல்களுக்கு, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் தாமோதரன்-96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X