ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் 'சுறுசுறு' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் 'சுறுசுறு'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:00

பெ.நா.பாளையம் : கொரோனா தொற்று குறைந்ததையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் வட்டார ஊராட்சிகளில், ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.



தொற்று பரவல் நடவடிக்கையாக, வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்வோரின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது. இதனால், குறைந்த அளவு பணியாளர்களே, சுழற்சி முறையில், இத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தனர்.தற்போது, தொற்று குறைந்துள்ளதால்,50 வயதுக்கும் மேற்பட்டவர்களும் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனால், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் அதிகரித்துள்ளன.இதுகுறித்து, வட்டார ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:கொரோனா தொற்று காரணமாக, இத்திட்டத்தில் பணிக்கு வரும் நபர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. அதாவது,50 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பணி செய்ய அனுமதிக்கப்படாமல் இருந்தது.தற்போது, தொற்று தீவிரம் குறைந்திருப்பதால்,

இத்திட்டத்தில், 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களும் பணியாற்றலாம் என, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களுக்கு நாளொன்றுக்கு, 274 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.கடந்த, 10 நாட்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X