கடன் தொல்லையால் ஆசிரியர் தற்கொலை வளத்தி அருகே கிராம மக்கள் சாலை மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:02

அவலுார்பேட்டை-வளத்தி அருகே ஆசிரியர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்டம் வளத்தி அடுத்த கண்டமநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 54; கம்மந்தாங்கல் கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர். இவர் திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் கடன் வாங்கி திருமண மண்டபம் கட்டியுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.இந்நிலையில், நேற்று காலை 6:00 மணியளவில் கண்டமநல்லுாரில் உள்ள அவரது நிலத்தில் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்தார்.வளத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.இதற்கிடையே, தனது சாவுக்கு காரணமானவர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வருக்கு அண்ணாமலை எழுதிய 4 பக்க கடிதம் கிடைத்தது.இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆசிரியர் அண்ணாமலையின் தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி நேற்று மதியம் 12:00 மணியளவில் தேவனுார் கூட்ரோடு அருகே செஞ்சி - சேத்பட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரியவர்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து 12:10 மணியளவில் கலைந்து சென்றனர்.அண்ணாமலை மகன் மதன்குமார், 26; அளித்த புகாரின் பேரில் ஆத்துரைச் சேர்ந்த வெங்கடேசன், கீழ்பென்னாத்துார் வட்டாரக் கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு, மேல்மலையனுார் ஆசிரியர் ராஜாராம், வளத்தி பத்திரப்பதிவு எழுத்தர் பாரதி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X