ஓடும் ரயிலில் தந்தையை தாக்க முயற்சி: அதிர்ச்சியில் மகள் சாவு | கடலூர் செய்திகள் | Dinamalar
ஓடும் ரயிலில் தந்தையை தாக்க முயற்சி: அதிர்ச்சியில் மகள் சாவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:04

கடலுார்-ஓடும் ரயிலில் தந்தையை வாலிபர் தாக்க முயன்றதால் அதிர்ச்சியில் மகள் மயங்கி விழுந்து இறந்தார்.சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 56; வாட்ச்மேன். இவர் தனது மனைவி கல்யாணி, 50; மகள் மகேஸ்வரி, 30; பேரன் உமேஷ்பவன், 4;ஆகியோருடன் சென்னையில் இருந்து திருச்செந்துாரில் உள்ள இளைய மகள் கோகிலா வீட்டிற்கு செல்ல செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணித்தார்.காத்திருப்பு பட்டியலில் அவர் குடும்பத்தினருடன் அமர்ந்தார். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் 2 ஆண்கள், 2 பெண்கள் ஏறினர். இதில், 25 வயது வாலிபர், ரயில் விழுப்புரத்தை கடந்ததும் அண்ணாமலையிடம் இருக்கையில் அமர இடம் கேட்டார்.இடம் தர அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரச்னை அதிகமாகவே ஆத்திரமடைந்த வாலிபர் கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகில் இரவு 7 மணிக்கு ரயில் வந்த போது, அண்ணாமலையை திடீரென கையால் தாக்க முயன்றார்.இதனை பார்த்த மகேஸ்வரி அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார்.கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நின்றதும், அருகில் இருந்தவர்கள் மகேஸ்வரியை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அவரது உடல்கடலுார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கடலுார் ரயில்வே போலீசார் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X