அங்கீகாரம்: சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சர்வதேச அளவில்...'புளு பிளாக் பீச்' பட்டியலில் இடம் பிடித்து அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:09

டென்மார்க் நாட்டை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அமைப்பு, உலகம் முழுதும் உள்ள, துாய்மையான கடற்கரைகளை தேர்ந்தெடுத்து, 'புளு பிளாக் பீச்' எனப்படும் நீலக் கொடி கடற்கரை என்ற அங்கீகாரத்தை வழங்கி வருகிறது.



இந்த சான்றிதழானது, சுற்றுச்சூழல் மேலாண்மை, நீரின் தரம், நீல நிறம், பாதுகாப்பு, குளிப்பதற்கேற்ற சுகாதாரமான நீர் உள்ளிட்ட 33 அம்சங்களை ஆராய்ந்து வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் மூலம், உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என பட்டியலிடப் படுகிறது.இந்தியாவில் குஜராத்தின் ஷிவ்ராஜ்பூர், டையு பிரதேசத்தில் கோக்லா, கர்நாடகாவில் காசர்கோடு, படுபித்ரி. கேரளாவில் கப்பாட், ஆந்திராவில் ருஷிகோண்டா, ஒடிஸாவில் கோல்டன், அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் ராதாநகர் ஆகிய எட்டு கடற்கரை பகுதிகளுக்கு 'நீலக் கொடி' சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.ஈடன் கடற்கரைக்குநீலக்கொடி அங்கீகாரம்



இந்நிலையில், புதுச்சேரி சின்ன வீராம்பட்டினத்தில் உள்ள ஈடன் கடற்கரைக்கு, தற்போது நீலக்கொடி (புளு பிளாக்) அங்கீகாரம் கிடைத்துள்ளது.அதேபோல, தமிழகத்தின் கோவளம் கடற்கரைக்கும் நீலக்கொடி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம், இந்தியாவில் நீலக்கொடி அங்கீகாரம் பெற்ற கடற்கரைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.'நீலக்கொடி' அங்கீகாரம் கிடைத்துள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, 2 கி.மீ., தொலைவிற்கு அழகிய மணற்பரப்பை கொண்டுள்ளது. இதில் 800 மீட்டர் தொலைவு மணல்பரப்பில் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இக்கடற்கரைக்கு, நீலக்கொடி அங்கீகாரம் கிடைக்க, கடந்த 2018-19 ம் ஆண்டு முதல் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு சுத்தமான குடிநீர், கழிப்பிடம், பார்க்கிங், கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.



அத்துடன் சுற்றுலா பயணிகள் குளித்த பிறகு உடை மாற்றும் அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த கடற்கரை, பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இங்கு கடலில் குளிக்கும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினால், மீட்பு பணிக்கு வீரர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கைகள், சின்ன வீராம்பட்டினத்திற்கு உலகின் அழகிய, சுத்தமான கடற்கரை பட்டியலில் இடம் பெற முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.என்ன நன்மைஉலகில் உள்ள 'புளு பிளாக் பீச்' பட்டியலில் இடம் பிடித்துள்ளதால், சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில், அழகிய சுத்தமான கடற்கரை என்பதை பிரதிபலிக்கும் வகையில் நீலக்கொடி ஏற்றப்படும்



இதனால், சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈடன் கடற்கரை ஈர்க்கும். வெளிநாடு, பல மாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் இப்பகுதியில் முக்கியத்துவம் பெறும்.சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் மேலும் 10 கடற்கரை பகுதிகளை தேர்ந்தெடுத்து, 'புளு பிளாக் பீச்' சான்றிதழ் பெற மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான கடற்கரைகளை அடையாளம் காணும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X