அறிவிப்பு: புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் ...அக்., 21, 25, 28ல் ஓட்டுப்பதிவுநடத்தை விதி அமலுக்கு வந்தது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:12

1,629 ஓட்டுச்சாவடிகள் அமைப்பு புதுச்சேரி, செப். 23-புதுச்சேரி மாநிலத்தில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல், மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது என, மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் நேற்று அறிவித்தார்.மேலும், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக கடந்த 1968 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.38 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த 2011ம் ஆண்டோடு முடிந்தது.அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக மாகியை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குள் தொகுதி மறு சீரமைப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முடித்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், மூன்று தினங்களுக்கு முன் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. நேற்று முன்தினம் ஓட்டுச்சாவடி பட்டியலை வெளியிட்டது.அறிவிப்புஇந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் நேற்று பகல் 12:00 மணிக்கு வெளியிட்டார்.அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகள், 812 கிராம பஞ்சாயத்துகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.முதல் கட்டம்காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய மூன்று நகராட்சிகள், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, டி.ஆர்.பட்டினம், திருநள்ளாறு ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில், மொத்தம் உள்ள 276 பதவிகளுக்கு, அக். 21ம் தேதி தேர்தல் நடக்கிறது.இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், வரும் 30ம் தேதி துவங்குகிறது. அக்., 7ம் தேதி மனு தாக்கலுக்கு இறுதி நாள். 8ம் தேதி மனுக்கள் பரிசீலனை. 11ம் தேதி மனு வாபஸ் பெற இறுதி நாள். 21ம் தேதி ஓட்டுப் பதிவு.முதல் கட்ட தேர்தலில், மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 512 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். 186 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இரண்டாம் கட்டம்புதுச்சேரி மாவட்டத்தில், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகளில் உள்ள 2 சேர்மன், 75 கவுன்சிலர் பதவிக்கான தேர்தல், வரும் அக்., 25ம் தேதி நடக்கிறது.இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், அக்., 4ம் தேதி துவங்குகிறது. 11ம் தேதி மனு தாக்கலுக்கு இறுதி நாள். 12ம் தேதி மனுக்கள் பரிசீலனை. 15ம் தேதி மனு வாபஸ் பெற இறுதி நாள். 25ம் தேதி ஓட்டுப்பதிவு.இரண்டாம் கட்ட தேர்தலில், 4 லட்சத்து 44 ஆயிரத்து 199 வாக்காளர்கள் ஓட்டுப்போட வசதியாக 631 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.மூன்றாம் கட்டம்அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனுார் ஆகிய 5 கொம்யூன் பஞ்சாயத்துகளில் தேர்தல், அக்., 28ம் தேதி நடக்கிறது.இதில், மொத்தம் 81 கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சிலர் உறுப்பினர், 81 கிராம பஞ்சாயத்து தலைவர், 634 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் என மொத்தம் 796 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல், அக்., 7ம் தேதி துவங்குகிறது. 15ம் தேதி மனு தாக்கல் செய்ய இறுதி நாள். 16ம் தேதி மனுக்கள் பரிசீலனை. 18ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற இறுதி நாள்; 28ம் தேதி ஓட்டுப் பதிவு:மூன்றாம் கட்ட தேர்தலில், 3 லட்சத்து 28 ஆயிரத்து 555 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். 634 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு நேரம்ஓட்டுப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 வரை நடைபெறும். இதில் மாலை 5:00 மணி முதல் 6:00 வரை கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா தொற்றாளர்கள் ஓட்டுப் போட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மின்னணு இயந்திரம்:உள்ளாட்சி தேர்தல் இதுவரை ஓட்டுச்சீட்டு முறையில் நடந்தது. இந்த முறை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.இதுவரை ஒட்டுப்பதிவு இயந்திரங்களில் ஒரு ஓட்டு மட்டுமே போட பயன்படுத்தப்பட்டது. இம்முறை பல்நோக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முழு ஆய்வு செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஓட்டு எண்ணிக்கை:மூன்று கட்டமாக நடைபெறும் ஓட்டுகள், வரும் அக்., 31ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.இதற்காக புதுச்சேரியில் 4, காரைக்கால், மாகி மற்றும் ஏனாமில் தலா ஒன்று என மொத்தம் 7 ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மறைமுக தேர்தல்:நகராட்சி துணைத் தலைவர்கள்-5; கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் -10; கொம்யூன் பஞ்சாயத்து துணைத் தலைவர்-10; கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர்-108 என, மொத்தம் 133 பதவிகளுக்கு, மறைமுக தேர்தல் நடத்தப்படும். இதற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.8,500 அலுவலர்கள்:உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கென ஏற்கனவே 15 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 91 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.புதுச்சேரி, காரைக்கால் கலெக்டர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளாகவும், மாகி மற்றும் ஏனாம் வட்டார நிர்வாக அதிகாரிகள் அந்தந்த பகுதி வட்டார தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவைத் தவிர, தேர்தல் பணியில் 8,500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.பார்வையாளர்கள் நியமனம்:நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து தேர்தல்களை ஒருங்கிணைத்திட, மாநில தேர்தல் ஆணையத்திற்கு நான்கு செயலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மேலும், 6 மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பொது மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.வருமான வரித்துறை, கஸ்டம்ஸ் மற்றும் மத்திய-மாநில சுங்கத் துறைகளை சேர்ந்த 6 வருவாய் அதிகாரிகள் தேர்தல் செலவுகளை பார்வையிடும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா கட்டுப்பாடு:கொரோனா பரவலை தடுத்திட வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரணி, பொதுக்கூட்டம், வாகனப்பேரணி, வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.ஓட்டு சேகரிப்பு பணிக்கு குறைந்த நேரமே அனுமதி வழங்கப்படும். மனு தாக்கலின் போது கூட்ட நெரிசலை தவிர்த்திடவும், கொரோனா நோயாளிகள் ஆன்லைனில் மனு தாக்கல் செய்திட சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதி:தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட இன்று முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. பொதுத் தேர்தலில் பின்பற்றப்படும் அனைத்து நடவடிக்கைகளும் இத்தேர்தலிலும் பின்பற்றப்படும். இது குறித்தும், தேர்தல் குறித்த விபரங்களையும் ்https://sec.py.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X