முறைகேடு குடிநீர் இணைப்புகள் 'கட்' | திருப்பூர் செய்திகள் | Dinamalar
முறைகேடு குடிநீர் இணைப்புகள் 'கட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:20

மடத்துக்குளம் : மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த, முறைகேடான குடிநீர் குழாய்களை அதிகாரிகள் துண்டித்து அப்புறப்படுத்தினர்.மடத்துக்குளம் அருகே, மெட்ராத்தி ஊராட்சி ராமேகவுண்டன்புதூர் பகுதியில், நேற்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், 'எங்களுக்கு போதிய அளவு குடிநீர் வினியோகம் இல்லை. எங்களுக்கு தேவையான குடிநீர் வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டோம்' என்றனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசிய பின், அவர்கள் கலைந்து சென்றனர். இப்பிரச்னை குறித்து ஆலோசித்த குடிநீர் வடிகால் வாரியத்தினர், ராமேகவுண்டன்புதுார் பகுதிக்கு போதிய குடிநீர் வினியோகம் இல்லாததற்கு காரணம், கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயின், பல இடங்களில் முறைகேடாக, குழாய் அமைத்து குடிநீர் திருட்டு நடப்பது தான் என உறுதி செய்தனர். இதற்குப்பின், அதிகாரிகள், துங்காவி ஊராட்சி, உடையார்பாளையம், காரத்தொழுவு ஊராட்சிப்பகுதியில், பிரதானக்குழாயில் முறைகேடாக உடைப்பு ஏற்படுத்தி, சிறிய குழாய்கள் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X