4 இடங்களில் திருட்டு போலீஸ் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:29

திண்டிவனம்-திண்டிவனத்தில் ரைஸ் மில்லில் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் பெரியசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜாபர் மகன் தாஜூதீன், 40; இவருக்கு, திண்டிவனம் செஞ்சி ரோட்டில் தீன் என்ற ரைஸ் மில் உள்ளது. நேற்று காலை ரைஸ் மில்லை திறந்து பார்த்தபோது, சிமென்ட் மேற்கூரை உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 3,000 ரூபாய், சி.சி.டி.வி., கேமரா திருடு போயிருப்பது தெரியவந்தது.இதே போன்று, அதே பகுதியில் சுரேஷ்குமார், 62; என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில்லில் மேற்கூரையை உடைத்து, திருட முயன்றிருப்பது தெரியவந்தது.மேலும், திண்டிவனம் வைரபுரம் செல்லும் சாலையில் உள்ள துர்கை காளியம்மன் சிலை முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.மூன்று சம்பவங்கள் குறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.மேலும் ஒரு திருட்டு திண்டிவனம் அடுத்த சாரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சதீஷ், 39; நொளம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர். நேற்று முன்தினம் இரவு சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், சாய்பாபா கோவிலில் பூஜையை முடித்து விட்டு, அதே பகுதியில் உள்ள புதிய வீட்டிற்குச் சென்று விட்டனர். நேற்று காலை பழைய வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே சாய்பாபா கோவிலுக்கு பயன்படுத்தி வந்த 28 கிலோ பித்தளை பொருட்கள், பீரோவில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X