உள்ளாட்சி இடைத்தேர்தல்; மனுத்தாக்கல் நிறைவு இன்று பரிசீலனை; 25ம் தேதி வரை 'வாபஸ்' பெறலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:30


பொள்ளாச்சி, உடுமலையில், ஊரக உள்ளாட்சிகளில் காலியாக இருக்கும் பதவியிடங்களை நிரப்ப வரும், அக்., 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதற்கு, மனுத்தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், கட்சியினர், போட்டி போட்டு மனுத்தாக்கல் செய்தனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், காலியாக உள்ள தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு (எஸ்.சி., பொது) இதுவரை நாரயணமூர்த்தி, சரஸ்வதி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தார்.



கடைசி நாளான நேற்று, மாமரத்துப்பட்டியை சேர்ந்த ரூபரேகா, 24, வேட்பு மனு தாக்கல் செய்தார். பி.இ., பட்டதாரியான இவருக்கு திருமணமாகவில்லை. வேட்பு மனுவை, தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திக் பெற்றுக்கொண்டார்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் போளியகவுண்டன்பாளையம், 4வது வார்டு (பெண்கள்), ஜமீன் முத்துார், 6வது வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்ப, வரும் அக்., 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. நேற்று வரை, இரண்டு வார்டுகளிலும் வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.இந்நிலையில், மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று, ஒரே நாளில் ஆறு பேர் மனு தாக்கல் செய்தனர். அதில், போளியகவுண்டன்பாளையம், 4வது வார்டுக்கு லட்சுமி, ஊராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்ததால், போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு பெற்றுள்ளார்.ஜமீன் முத்துார், 6வது வார்டுக்கு, செந்தில்குமார், விக்னேஷ்குமார், ஜெகதீஸ்குமார், குப்புசாமி, மற்றும் காந்திமதி, என, ஐந்து பேர் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தனர்.ஆனைமலைஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதுார் ஊராட்சியில், காலியாக உள்ள தலைவர் பதவியை நிரப்ப, இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த, 20ம் தேதி தி.மு.க.,வினர் மனு தாக்கல் செய்த நிலையில், இறுதி நாளான நேற்று, அ.தி.மு.க.,வினர் மனு தாக்கல் செய்தனர்.வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., கஸ்துாரி தலைமையில், இதற்கு முன் திவான்சாபுதுார் ஊராட்சித்தலைவராக இருந்த முனியனின் மனைவி சரோஜினி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சசிக்குமாரிடம் மனு தாக்கல் செய்தார்.வேட்பு மனு தாக்கலுக்கு கட்சியினர் கூட்டமாக சமூக விலகலின்றி வந்ததுடன், ஒன்றிய அலுவலக வளாகத்தில், பலரும் முக்கவசம் அணியாமல் கொரோனா பரப்பும் வகையில் சுற்றினர்.



கிணத்துக்கடவுகிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், நெ.10 முத்துார் ஊராட்சி வார்டு எண்:3ன், உறுப்பினர் பதவிக்கு நேற்று, பாப்புசாமி, மகாலிங்கம் ஆகியோர் தேர்தல் அதிகாரி பொன்மணியிடம் மனுதாக்கல் செய்தனர். ஏற்கனவே, மகேஷ்குமார், மருதமாணிக்கம், நடராஜ் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.உடுமலைஉடுமலை ஒன்றியத்தில், காலியாக உள்ள ஆர்.வேலுார் ஊராட்சித்தலைவர் (பொது, பெண்) பதவிக்கு, நடத்தப்படுகிறது. உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், மனுத்தாக்கல், கடந்த, 15ம் தேதி துவங்கிய நிலையில், நேற்று நிறைவடைந்தது.தி.மு.க., ஆளும்கட்சியாக இருப்பதால், பிற கட்சிகளைச்சேர்ந்தவர்கள், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. அவ்வகையில், ஊராட்சித்தலைவர் பதவியை கைப்பற்ற 4 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஊராட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிட கலாமணி, அன்னலட்சுமி, உமா, பரிமளம் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுக்களை வாபஸ் பெற, வரும், 25ம் தேதி, பகல், 3:00 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.குடிமங்கலம்குடிமங்கலம் ஒன்றியம், ஆமந்தகடவு ஊராட்சி, 5வது வார்டு உறுப்பினர், ராஜினாமா செய்தததால், காலியாக இருந்த பதவியிடத்துக்கு, இடைத்தேர்தல் நடக்கிறது. நேற்று மாலை வரை, மூன்று மனுக்கள் பெறப்பட்டன. இன்று, வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது.இந்த வார்டில், மொத்தம், 292 வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுப்பதிவுக்காக, ஓட்டுச்சாவடி தேர்வு செய்யப்பட்டு, அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X