கிரைம் செய்திகள்... | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கிரைம் செய்திகள்...
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:37

கோயிலில் உண்டியல் உடைப்புமயிலம்: தென்பசார் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில், உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை திருடு போனது. போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.குட்கா கடத்தியவர் கைதுகண்டாச்சிபுரம்: அடுக்கம் கிராமத்தில் விழுப்புரம் தனி தாசில்தார் தயாளன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற கர்நாடகா மாநில அரசு பஸ்சில், திருவண்ணாமலையில் இருந்து கடத்தி வந்த 4,017 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிந்து தோகைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 42; என்பவரை கைது செய்தனர்.சந்தனக்கட்டை கடத்தியவர் கைதுகண்டாச்சிபுரம்: மேல்வாலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் படை தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விழுப்புரத்தில் இருந்து வந்த தனியார் பஸ்சில் 15 கிலோ சந்தனக் கட்டைகளை கடத்தி வந்த, கிருஷ்ணகிரி மாவட்டம், புலியனுார், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த குமார், 34 என்பவரைப் பிடித்து கண்டாச்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். சந்தனக் கட்டைகள் விழுப்புரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.லாட்டரி விற்ற இருவர் கைதுவிழுப்புரம்: மேற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற நாராயணன் நகரைச் சேர்ந்த வேடியப்பன், 40; கந்தசாமி லே அவுட்டைச் சேர்ந்த சுரேஷ்பாபு, 56; ஆகியோரை கைது செய்தனர்.டிரைவரைத் தாக்கியவர் கைதுவிழுப்புரம்: மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், 37; இவர் தனது ேஷர் ஆட்டோவில் நேற்று முன்தினம் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பானாம்பட்டைச் சேர்ந்த ரகுபாலன், 24; என்பவர் மீது ேஷர் மோதுவது போல் சென்றதால் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ரகுபாலன், முருகனை திட்டி தாக்கினார். புகாரின்பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து ரகுபாலனை கைது செய்தனர்.மணல் கடத்திய 5 பேர் கைதுதிருக்கோவிலுார்: அரகண்டநல்லுாரில் பயிற்சி டி.எஸ்.பி., நமச்சிவாயம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கொடுங்கால் அந்தோணியார் கெபி அருகே மணல் கடத்தி வந்த வீரசோழபுரத்தைச் சேர்ந்த சங்கர் மகன் விக்னேஷ், 20; சந்திரசேகர் மகன் ராஜசேகர், 20; அய்யனார் மகன் விஜயன், 20; காத்தவராயன் மகன் ஞானவேல், 38; செல்வம் மகன் சிவகண்டன், 26; ஆகியோரை கைது செய்து 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X