தேர்தலுக்கான ஓட்டுப் பெட்டிகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
தேர்தலுக்கான ஓட்டுப் பெட்டிகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:41

கள்ளக்குறிச்சி-உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தும் ஓட்டுப் பெட்டிகள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, திருநாவலுார், ரிஷிவந்தியம் ஆகிய 9 ஒன்றியங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நேற்றுடன்முடிவடைந்தது.மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பழைய ஓட்டு சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சியிலிருந்து அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு ஓட்டுப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்து பெட்டிகளையும் திறந்து சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டுப் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X