காலையில் 'செய்தி'... மாலைக்குள் தீர்வு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:46

கோவை : பொதுமக்களை பாதிக்கும் எந்தவொரு பிரச்னை என்றாலும், அப்பிரச்னை முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து அது குறித்த செய்தியை படங்களுடன், வெளியிடுவது நமது நாளிதழின் வழக்கம். இதனால்தான் தங்கள் பகுதியில் ஒரு பிரச்னை என்றால், அதை படம் எடுத்து உடனே 'வாட்ஸ் ஆப்'ல் 'தினமலர்' நாளிதழுக்கு அனுப்பி விடுகின்றனர்



நம் வாசகர்கள்.அந்த செய்தி வெளியாகி விட்டால், ஏற்படுத்தும் அதிர்வலைகள் அனைவரும் அறிந்ததே. உடனடியாக நடவடிக்கை எடுக்குதேமாநகராட்சியாகட்டும், மாவட்ட கலெக்டராகட்டும், மின்வாரிய அதிகாரிகள் ஆகட்டும்...நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.இங்கே...சமீபகாலமாக நமது நாளிதழின் 'இன்பாக்ஸ்' பகுதியில் வெளியாகி, தீர்வு கிடைத்த சில பிரச்னைகள்!அப்பாடா... பாதையை திறந்தாச்சு!நியூசித்தாபுதுார், வெங்கிடசாமி ரோட்டில், தரைப்பாலம் கட்டும் பணி நிறைவடைந்து, இரு மாதங்களாகியும், பாதை மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் இருப்பது குறித்தும், வாகன ஓட்டிகள் அவதிப்படுவது குறித்தும், 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இப்பாதை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.- நெல்சன், நியூசித்தாபுதுார்.


குப்பையை அள்ளிட்டாங்க!சரவணம்பட்டி - கீரணத்தம் ரோடு பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் பணிக்கு வராததால், சாலையோரம், குப்பை மற்றும் உணவு கழிவுகள் குவிந்துள்ளன. துர்நாற்றம் வீசுகிறது, என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து, துாய்மை பணியாளர்கள் அப்பகுதியில், குவிந்திருந்த குப்பையை அப்புறப்படுத்தியுள்ளனர்.- சரவணக்குமார், கீரணத்தம்.

பூங்காவை சுத்தப்படுத்தியாச்சு! சாய்பாபா காலனி, சின்ன சுப்பண்ணன் வீதியில் உள்ள, மாநகராட்சி பூங்கா, பராமரிப்பின்றி உள்ளது. வளாகத்துக்குள் குவிந்துள்ள குப்பையை அப்புறப்படுத்தி, பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும், என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. செய்தியை தொடர்ந்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பூங்கா வளாகத்தில் குவிந்திருந்த குப்பையை அப்புறப்படுத்தினர். இனி, பூங்கா முறையாக பராமரிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.- முருகேஷ், சாய்பாபா காலனி.

வையாபுரி நகரில் புது விளக்கு பொருத்தியாச்சு! மாநகராட்சி, 33வது வார்டுக்கு உட்பட்ட, சரவணம்பட்டி, வையாபுரி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 27) கடந்த சில மாதங்களாக விளக்கு எரியாதது குறித்து, மின் கம்பத்தின் படத்துடன், 'இன்பாக்ஸ்' பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி மின் ஒப்பந்த ஊழியர்கள், இக்கம்பத்தில், பழுதான விளக்கை அகற்றிவிட்டு, புது விளக்கு பொருத்தி சென்றனர். தற்போது விளக்கு எரிகிறது.- சண்முகம், வையாபுரி நகர்.

தண்ணீர் வீணாவதை தடுத்தாச்சு! செல்வபுரம், செல்வசிந்தாமணி குளம் அருகில் உள்ள, போயர் வீதியில், பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், போர்வெல் நீர் வீணாக சாலையில் ஓடுவது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள், குழாய் உடைப்பை சரி செய்து சென்றனர்; தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது.- செந்தில், போயர் வீதி.

சாக்கடை கால்வாயை கண்டுபிடிச்சாச்சு! மாநகராட்சி, 98வது வார்டுக்கு உட்பட்ட, சக்தி நகரில் சாக்கடை கால்வாய் முழுவதும் அடைபட்டுள்ளது. இக்கால்வாயை துார்வாரி, கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி துாய்மை பணியாளர்கள், இப்பகுதி முழுவதும் அடைபட்டிருந்த, சாக்கடை கால்வாய்களை துார்வாரி சுத்தப்படுத்தியுள்ளனர்.- விக்னேஷ், சக்தி நகர்.

பாதியில் நின்ற பணியை முடிச்சாச்சு! பீளமேடு, காந்தி மாநகர், ராகம் பேக்கரியில் இருந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை, சாலை செப்பனிடும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டு ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு, பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இது குறித்து, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நிறுத்தப்பட்டிருந்த சாலை செப்பனிடும் பணி, மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது சாலை முழுவதுமாக செப்பனிடப்பட்டுள்ளது.- கண்ணபிரான், காந்தி மாநகர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X