சின்னசேலம்-சின்னசேலத்தில் பட்டாசுக் கடை உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், பட்டாசுக் கடை உரிமையாளர்கள் பட்டாசுகளை விற்கும் போது வாளியில் மணல், தண்ணீர் போன்ற விபத்து தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், 10க்கும் மேற்பட்ட சின்னசேலம் பகுதி பட்டாசுக் கடை உரிமையாளர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.