ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 1,925 வேட்பு மனுக்கள் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 1,925 வேட்பு மனுக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:47

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 1,925 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. ஒன்றியத்தில் காலியாக உள்ள 444 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 1,455 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல், 60 ஊராட்சித் தலைவர் பதவிக்கு, 291 வேட்பு மனுக்களும், 25 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 158 வேட்பு மனுக்களும், 3 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 21 வேட்பு மனுக்களும் பெறப்பட்டுள்ளன.மொத்தமாக ஒன்றியத்தில் 1,925 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X