முற்றுகை:கலெக்டர் அலுவலகம் முன் மாணவ, மாணவியர்...அரசு கல்லூரிக்கு கட்டடம் இல்லாததால் விரக்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:52

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சியில் வகுப்புகள் துவங்கியும் அரசு கல்லுாரிக்கான இடம் தேர்வு செய்யப்படாததால் கல்வி கற்க முடியாமல் தவித்து வரும் மாணவ, மாணவியர்கள் நேற்று சாலை மறியல் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் இயங்கி வந்த அரசு கலைக்கல்லுாரிக்கான கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவக்கல்லுாரிக்கான இடமாக மாற்றப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.அப்போது முதல் அரசு கல்லுாரிக்கான இடம் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. இதனால் அரசு கல்லுாரியில் படித்து வரும் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயில இடமின்றி பரிதவித்து வருகின்றனர்.கொரோனா பரவலால் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப்பின், சில மாதங்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லுாரிகள் துவக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.ஆனால், கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரி மாணவர்களுக்கு கட்டடம் இன்னும் தேர்வு செய்யப்படாமல் இழுபறி நிலவி வருவதால், அவர்களுக்கு மட்டும் ஆன்லைன் கல்வி வழிமுறையே தொடர்கிறது. செமஸ்டர் தேர்வு நெருங்கி வருவதால், கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.இந்த கல்லுாரியில் இந்த ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கூட்டம் பல தவணைகளில் வெவ்வேறு இடங்களில் நடத்தி புதிய மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் கல்லுாரிக்கு இடம் ஏற்பாடு செய்வதில் அதிகாரிகள் அக்கறை செலுத்தவில்லை.இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நேற்று காலை 11:00 மணியளவில் கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் வேண்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஏ.டி.எஸ்.பி., ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து 11:30 மணியளவில் அனைவரும் கலைந்து கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.கலெக்டர் அலுவலகம் முன் காலை 11:55 மணியளவில் கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சரவணன், தாசில்தார்கள் விஜய பிரபாகரன், பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில், கனியாமூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒளி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் தற்காலிக அடிப்படையில், கல்லுாரி இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்



.அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் சமாதானமாகி 12:15 மணியளவில் கலைந்து சென்றனர்.உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று சாலை முழுவதும் வரிசை வரிசையாக வாகனங்களின் அணிவகுப்பினால், ஸ்தம்பித்திருந்த நிலையில், மாணவர்களின் மறியல் போராட்டமும் சேர்ந்ததால், கள்ளக்குறிச்சி நகரமே நேற்று நெரிசலில் சிக்கி, திக்கு முக்காடிப்போனது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X