கிள்ளை-கிள்ளை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் மழை நீர் வடிகால் துார் வாரும் பணியை, செயல் அலுவலர் தங்கவேல் பார்வையிட்டார்.பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் மற்றும் வடிகால்களை துார் வாரும் பணியை வரும் 25ம் தேதி வரை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்பேரில், கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர்., திட்டு, கலைஞர் நகர், சிசில் நகர் உள்ளிட்ட இடங்களில் வாய்க்கால்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் துார் வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை, செயல் அலுவலர் தங்கவேல் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தலைமை எழுத்தர் செல்வராஜ் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.