கோவை, : கோவை மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன் சார்பில், 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட கூடைப்பந்து அணி தேர்வு, நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நேற்று நடந்தது.
100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.முதலில் வீரர்களை குழுக்களாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வீரர்களின் விளையாட்டு திறன், பந்தை எடுத்து செல்லும் விதம், வேகம், தடுப்பாட்டம், விளையாட்டு நுணுக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தலா, 40 வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.தொடர்ந்து, இவ்வீரர்களுக்கான பயிற்சி முகாம் வரும், 24ம் தேதி முதல் அக்., 4ம் தேதி வரை நடக்கவுள்ளது.