கோவிலுக்கு வாடகை பாக்கிஇரண்டு கடைகளுக்கு 'சீல்' | கடலூர் செய்திகள் | Dinamalar
கோவிலுக்கு வாடகை பாக்கிஇரண்டு கடைகளுக்கு 'சீல்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
04:56

கடலுார்-கடலுாரில் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இரண்டு கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தாததால், அதிகாரிகள் சீல் வைத்தனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் உள்ளன.இந்த கடைகளுக்கு மாதந்தோறும் அறநிலையத்துறை சார்பில்,வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. பாடலி பஜாரில் இயங்கிவரும் இரு கடைகளின் உரிமையாளர்கள் ரூ.1.86 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்துள்ளனர். கடைகளுக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்ததாகவும் தெரிகிறது.அதையொட்டி, கடையை காலி செய்யும்படி அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஆனாலும், தொடர்ந்து கடை நடத்தி வந்ததால், கடலுார் அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் தலைமையில் செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் நேற்று இரண்டு கடைகளை பூட்டி சீல் வைத்தனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X