பருவ மழை: கலெக்டர்-, அதிகாரிகள் ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:00

கடலுார்-வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனத்தினர் பங்கேற்ற கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், உதவி வேளாண் அலுவலர், செவிலியர் ஆகியோர் அடங்கிய கிராம குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.பேரிடர் சமயங்களில் தாழ்வான பகுதிகள், வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும் இடங்களில் உள்ள பொது மக்களை, பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு கொண்டு சென்று அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், உடை, மருத்துவ வசதிகளை செய்திட மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிபுரிய வேண்டும்.வெள்ள நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சரியாக சென்றடைய தேவையான உதவி செய்ய வேண்டும்.'வாட்ஸ் அப்' குழு உருவாக்கி பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், ஜெனரேட்டர்களை முதல் தளம் அல்லது அதற்குமேல் தளத்தில் வைக்க வேண்டும். மின்சாரம் இல்லாத போது உபயோகிக்க ஏதுவாக பேட்டரிகள் மற்றும் டீசல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.கொசுக்கள் உருவாகாதபடி மருத்துவமனைகள் சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் அவசரகால தேவையான உபகரணங்கள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.பள்ளி கட்டடங்கள் மழையினால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் இருந்தால் பழுது நீக்கம் செய்து மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.பள்ளியில் விடுதிகளில் உணவு தயார் செய்ய போதுமான மளிகைப் பொருள்கள் மற்றும் எரிவாயு உருளைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து அவசர காலங்களுக்கு முன் அவசர காலங்களுக்கு பின் பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச வழிமுறைகளை கல்வி நிறுவனங்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டும்.பள்ளிகளில் உள்ள மின் கம்பிகளுக்கு இடையே உள்ள மரக்கிளைகளை அகற்றி, பழுதான மின் கம்பிகள், திறந்தவெளி கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழல் குறித்து செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பயிற்சி அளித்தல் வேண்டும்.தொலை தொடர்பு நிறுவனங்கள் தொலை தொடர்பு கோபுரங்கள் உயரமான இடத்தில் அமைக்கவும் பேரிடர் காலத்தில் தொலை தொடர்பு துண்டிப்பு ஏற்படாவண்ணம் டீசல் ஜெனரேட்டர் வசதிகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் பொது மக்களுக்கு கிடைக்க ஒரு வார காலத்திற்கு தேவையான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரஞ்ஜித்சிங், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X