ஓ.கீரனுார் பாசன ஏரி | கடலூர் செய்திகள் | Dinamalar
ஓ.கீரனுார் பாசன ஏரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:02

பெண்ணாடம்-பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் 70 ஏக்கருக்கு மேல் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன ஏரி உள்ளது. இதன் மூலம் ஓ.கீரனுார், பெ.பூவனுார், அரியராவி, திருமலை அகரம் கிராம விவசாயிகள், 200 ஏக்கர் பரப்பில் நெல், கரும்பு ஆகியவற்றை சாகுபடி செய்கின்றனர். ஏரி பல ஆண்டுகளாக துார் வாராததால், அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்து, துார்ந்துள்ளது. நீர்பிடிப்பு பரப்பளவும் குறைந்து, மழை காலங்களில் ஏரியில் முழு அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியவில்லை. பாசன காலங்களில் தண்ணீரின்றி கிராம விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாமல் சிரமம் அடைகின்றனர். ஓ.கீரனுார் பாசன ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X