இறுதிக்கட்டத்தில் 'டோபிகானா' கட்டுமானம் 'வெளுத்துக்கட்டும்' பணி வேகம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இறுதிக்கட்டத்தில் 'டோபிகானா' கட்டுமானம் 'வெளுத்துக்கட்டும்' பணி வேகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:03

கோவை : உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 'டோபிகானா' (சலவையகம்) கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, பேரூர் பைபாஸில் 'டோபிகானா' செயல்படுகிறது.

மேம்பாலம் பணிக்காக, இதை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் பண்ணை வளாகத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டு, புதிதாகவே சலவையகம் மற்றும் 96 தொழிலாளர் குடியிருப்பு கட்டப்படுகிறது.78 சலவை தொழிலாளி குடும்பத்தினர், அனைவருக்கும் வீடு திட்ட பயனாளிகள் இருவர், முத்தண்ணன் குளக்கரையில் வசித்த, 16 குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.வளாகத்தின் மையத்தில் துணி துவைக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது.

சுற்றிலும் தார் ரோடு போடுவதற்கு ஜல்லி, செம்மண் பரப்பப்பட்டு உள்ளது. தண்ணீர் தொட்டி கட்ட வேண்டியிருக்கிறது.இதற்கிடையே, பயனாளிகள் தேர்வு செய்ததில் தவறு நடந்திருப்பதாகவும், சிலரது பெயர்கள் விடுபட்டு இருப்பதாகவும், குடிசை மாற்று வாரியம் மீது சிலர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.குடிசை மாற்று வாரியத்தினர் கூறுகையில், 'இன்னும் ஒரு மாதத்துக்குள்பணிகள் முழுமையாக முடிந்து விடும். சலவையகத்தில் வசிப்போரை பயனாளிகளாக தேர்வு செய்து, வீடு ஒதுக்கியுள்ளோம். சிலர், பொருளாதார ரீதியாக வசதி பெற்று, வேறு இடத்துக்கு பெயர்ந்து விட்டனர். சொந்தமாக வீடு வைத்திருக்கின்றனர்.அவர்கள், முன்னோர்கள் பெயரை கூறி, ஒதுக்கீடு கேட்கின்றனர். அவ்வாறு வழங்க இயலாது என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். இருப்பினும், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X