தொண்டாமுத்தூர் : மாதம்பட்டி ஊராட்சியில், வார்டு கவுன்சிலர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்றுடன் நிறைவடைந்தது.தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதம்பட்டி ஊராட்சியில், 3வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தல் வரும், 9ம் தேதி நடக்க உள்ளது.
கடந்த, 15ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது.கடந்த, 20ம் தேதி, தி.மு.க., கூட்டணி சார்பில், சிவப்பிரகாஷ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் இறுதி நாளான நேற்று, அ.தி.மு.க., சார்பில், கார்த்திக்ராஜா, மனோகரன் ஆகிய இருவரும், பா.ஜ., சார்பில், சர்வேஷ்பிரசாந்த் மற்றும் சுயேச்சையாக மூன்று பேர் என, நேற்று மொத்தம் ஐந்து பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.நேற்று மாலை, 5:00 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தற்போது, 3வது வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில் போட்டியிட, மொத்தம், 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் வேட்புமனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்பட உள்ளன.