வளர்இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்த பயிற்சி | கடலூர் செய்திகள் | Dinamalar
வளர்இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறித்த பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:06

நடுவீரப்பட்டு-கிராமப்புற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில், வளர் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி வகுப்புகள் நடந்தது.நடுவீரப்பட்டு அரசுமேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு திட்ட அலுவலர் கோமதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் வளர் இளம் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டசத்து குறைபாடுகள், அதனை சரி செய்யும் வழிமுறைகள் குறித்தும் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஊட்டசத்து உணவு வகைகள் கண்காட்சி நடந்தது.நிகழ்ச்சியில் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள், தேசிய ஊட்டச்சத்து வட்டார திட்ட உதவியாளர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X