நுண்துளை முறையில் முதியவருக்கு இருதய வால்வு மாற்று சிகிச்சை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:08

கோவை : கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 82 வயது முதியவருக்கு, நுண்துளை முறையில், இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.



கோபியை சேர்ந்த திருவேங்கிடம் என்ற 82 வயது முதியவர், கடந்த வாரம் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில், இருதயத்தில் உள்ள அயோடிக் வால்வு, 4 செ.மீ.,ல் இருந்து 0.4 செ.மீ.,ஆக சுருங்கியிருப்பது தெரியவந்தது.இதனால் இருதயம் உயர் ரத்த அழுத்தத்தில் வேலை செய்துள்ளது. அதேசமயம், முதியவர் வேகமாக நடந்து செல்ல முயன்றதால், திடீர் மயக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது.முதியவர் மேல் சிகிச்சைக்காக கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய சிகிச்சை நிபுணர் தியாகராஜமூர்த்தி மயக்க மருந்து நிபுணர் அசோக் ஹரிஹரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், தொடைப்பகுதி ரத்தக்குழாய் வழியாக இரு குழாய்களை செலுத்தி, இருதயத்தில் சுருங்கி இருந்த அயோடிக் வால்வை மாற்றி, வேறொரு வால்வை பொருத்தி விரிவடைய செய்தனர்.



டாக்டர்கள் கூறுகையில், 'மாற்றப்பட்ட வால்வின் பெயர், 'எட்வர்ட்ஸ் சேப்பியன்-3' ஆகும். பொதுவாக இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டவர்களின் நெஞ்சு பகுதியை, பிளந்துதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆனால், இவருக்கு ஆஸ்துமா, சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததால், டி.ஏ.வி.ஆர்.,என்ற நுண்துளை முறையை கையாண்டோம்.ஆஞ்சியோகிராம் போன்ற இந்த சிகிச்சை முறையில், நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்காமல் சிகிச்சை அளிக்கப்படும். நுண்துளை முறையில் வால்வு மாற்றப்பட்டது கோவையில் இதுவே முதல் முறையாகும். சிகிச்சைக்கு பிறகு முதியவர் நலமாக உள்ளார்'என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X