அடிப்படை வசதியில்லாத கரும்புக்கடை முதல்வரின் தனிப்பிரிவுக்கு பறந்தது மனு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:09


கோவை : கோவை கரும்புக்கடை பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தரக்கோரி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு, கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் மனு அனுப்பியிருக்கின்றனர்.இதன் செயலாளர் அப்துல் ஹக்கீம் அனுப்பியுள்ள கடிதம்:



கரும்புக்கடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். மூன்று தனியார் பள்ளி, ஒரு அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு போதிய அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை வசதி செய்ய வேண்டும். அரசு பள்ளியை தரம் உயர்த்தி, கழிவு நீர் பண்ணை வளாகத்தில் உள்ள இடத்தில் கட்டிக்கொடுக்க வேண்டும்.போத்தனுார், குனியமுத்துார், டவுன்ஹால் பகுதிக்குச் சென்றே வங்கி சேவை பெற வேண்டியிருக்கிறது. இப்பகுதி மக்களுக்காக வங்கிக் கிளை துவக்க வேண்டும். பூங்கா, சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானம், நுாலக வசதி ஏற்படுத்த வேண்டும்.மருத்துவ சேவைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கோ, நஞ்சுண்டாபுரம் மாநகராட்சி மருத்துவமனைக்கோ செல்ல வேண்டியிருக்கிறது. இப்பகுதியில் மருத்துவமனை கட்டிக்கொடுக்க வேண்டும்.ஆத்துப்பாலத்தில் மேம்பால பணி நடப்பதால், உக்கடம் கழிவு நீர் பண்ணை, குழந்தை கவுண்டர் வீதி, சாரமேடு, பூங்கா நகர் வழியாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.நொய்யல் ஆறு நீர் வழித்தடத்தில் குப்பை கொட்டுவதை தடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாய்க்கால்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X