கோவை : ஹிந்து முன்னணி நிர்வாகி சசிகுமாரின் நினைவு மலரஞ்சலி நிகழ்ச்சி, நேற்று கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்தது.ஹிந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராகஇருந்த சசிகுமார், 2016ம் ஆண்டு செப்., 22ல் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது நினைவஞ்சலி கூட்டம், நேற்று கோவை காட்டூர் ஹிந்து முன்னணி அலுவலகத்தில் நடந்தது.ஹிந்து முன்னணிமாவட்ட தலைவர்தசரதன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர்குமார்பேசினார். காந்திபுரம்வி.கே.கே.மேனன் சாலையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ் பிரிவில் உள்ள எல்லை மாகாளியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, சக்கர விநாயகர் கோவில் அருகே நிறைவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த சசிகுமார் உருவப்படத்துக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டு, நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், சசிகுமார் உருவப்படத்துக்கு, திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.