கோவை : கோவா மாநிலத்தில் இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் நடத்திய, 15வது உலகளாவிய இரண்டு நாள் மக்கள் தொடர்பு மாநாட்டில், கோவை சசி விளம்பர நிறுவனர் சுவாமிநாதனுக்கு, 'ஹால் ஆப் பேம்' என்ற வாழ்நாள் சாதனையாளர் விருதினை, கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன்பிள்ளை வழங்கினார்.
மக்கள் தொடர்பு மற்றும் விளம்பர துறையில் இவர் புரிந்த குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக, இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். விழாவிற்கு, இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் நிறுவனர் சேர்மன் ஜெயராம் தலைமை வகித்தார்.விழாவில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பங்கேற்று, ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு துறையில் சாதனை புரிந்த, பல்துறை வல்லுனர்களுக்கும் 2021 ஆண்டுக்கான விருதுகள் வழங்கி, பாராட்டிப் பேசினார். விழாவில், பல மாநிலங்களிலிருந்தும், நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்பு அலுவலர்கள், ஊடக துறை வல்லுனர்கள் பங்கேற்றனர்.