தொண்டாமுத்தூர் : டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகையில் உள்ள தனியார் நிறுவனங்களின் பெயர் அகற்றப்பட்டு வருகிறது. தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில், தனியார் நிறுவனத்தின் பெயருடன் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
டி.ஜி.பி., உத்தரவின்படி, போலீஸ் ஸ்டேஷன் பெயர் பலகையில் இருந்த தனியார் நிறுவனத்தின் பெயர் மறைக்கப்பட்டது. பேரூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, தனியார் நிறுவனத்தின் பெயருடன் கூடிய பெயர் பலகை அகற்றப்பட்டது.