சென்னை-ரயிலில் கஞ்சா கடத்திய ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர், ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து நேற்று, சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்த, பினாக்கினி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணியரின் உடமைகள் சென்ட்ரலில், ரயில்வே பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்பட்டது. அப்போது, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், தாவரம் கிராமத்தைச் சேர்ந்த துர்காபிரசாத், 19 என்பவை பிடித்து விசாரித்தபோது, அவர் பையில், 6 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, துர்காபிரசாத் கைது செய்யப்படார். மீட்கப்பட்டா கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.