ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' அதிகாரிகளுடன் வாக்குவாதம் | சென்னை செய்திகள் | Dinamalar
ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Added : செப் 23, 2021 | |
Advertisement
 

செங்குன்றம்-தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, புழல் ஏரிக்கரையில் உள்ள வீடுகளை அகற்ற அரசு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியதை, பொதுமக்கள் எதிர்த்ததால் பரபரப்பானது.சென்னை செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான புழல் - செங்குன்றம் ஏரி உள்ளது.அங்குள்ள செங்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலகம் முதல் நாரவாரிக்குப்பம் எல்லை வரை, ஏரிக்கரை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் வீடு, கடை, கோவில் மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் என, 193 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வில், வருவாய்த் துறையினர் கணக்கெடுத்தனர்.இவற்றில், 1,200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.அதனால், மேற்கண்ட இடங்களில் வசிப்போருக்கு நேற்று காலை, 10:00 மணியளவில், பொன்னேரி வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறையினர் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த மக்கள், செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில் மறியல் செய்ய தயாராகினர். இதனால், அங்கு பரபரப்பானது.சம்பவ இடத்திற்குச் சென்ற மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ., சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுப்பதாக அதிகாரிகளிடம் கூறினார்.தங்கள் பிரச்னை குறித்து அனைவரையும் அழைத்து, அரசு அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால், அவர்களுக்கு கால அவகாசம் கிடைத்துள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X