சென்னை-சிறப்பாக பணியாற்றுவது குறித்து, ரயில்வே போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று, சென்னையில் நடந்தது.சென்னை, எழும்பூரில் உள்ள, போலீஸ் அலுவலக வளாகத்தில், இப்பயிற்சி முகாமை, ரயில்வே போலீஸ் கூடுதல், டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர் துவங்கி வைத்தார்.சென்னை ரயில்வே போலீஸ் மாவட்டத்தை சேர்ந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, தகவல் தொடர்பு, அடிப்படை செயல்பாடு, மரியாதையாக நடத்துதல், ஆளுமை திறன் மேம்பாடு, கால நிர்வாகம் மற்றும் இலக்கு நிர்ணயம் குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. இன்றைய முகாமில், நடத்தை, திறன்மேம்பாடு, பணியிட நடவடிக்கைகள் மற்றும் குழு நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ரயில்வே போலீசார் பயணியருக்கும், பொதுமக்களுக்கும் மிகச்சிறப்பான முறையில், கடமையை செய்வதற்கு, இந்த பயிற்சி உறுதுணையாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில், ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி., கல்பனா நாயக், உதவி டி.ஜ.ஜி., ஜெயகவுரி, சென்னை ரயில்வே போலீஸ் மாவட்ட கண்காணிப்பாளர் இளங்கோ மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.